Sunday, January 1, 2017

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

யுகபாரதி வரிகளில் நந்தினி ஷ்ரிகர் குரலில் இமானின் இதம்
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ (கண்ணம்மா...)
செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம் எண்ணுதம்மா (கண்ணம்மா...)
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென வாயார போற்றுவான்
கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நெட்டி தள்ளுதம்மா (கண்ணம்மா...)
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ

https://www.youtube.com/watch?v=8eIRNHLEfCA

No comments:

Post a Comment